முதல்வர் ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.. அத்துடன், மதுரைக்கு அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்பட உள்ளது என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜு கேட்டுள்ளார்..!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாளையொட்டி மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கட்சி கொடியேற்றி வைத்தார்..
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்துள்ளார்… அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலங்களை முதல்வர் அறிவிப்பாகவும் வெளியிட்டு இருக்கிறார்.. முதல்வர் அறிவித்த மேலக்கால் சாலையை அகலப்படுத்துவற்கு பதில், வைகை ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கலாம். முதல்வர் ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காக மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார்.
மதுரையின் வளர்ச்சிக்கு இந்த அரசு என்ன செய்ய போகிறது, என்னென்ன திட்டங்களை கொண்டு வர போகிறது என்பதை விரிவாக எடுத்து சொல்ல வேண்டும்.. மதுரையில் தொலைநோக்கு பார்வையுடன் செய்ய வேண்டும்.. முதல்வர் அறிவித்திருக்கிறார், ஆனால் இது அறிவிப்புடன் நின்றுவிடக்கூடாது.. எந்த நிதியில், எந்த திட்டங்கள் நிறைவேற போகிறது? மத்திய அரசு நிதியை பெற்று நிறைவேற்ற போகிதறா? அல்லது உலக வங்கியில் நிதியை வாங்க போகிறதா? என்பதை விளக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.. பெண்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் தருவதே அதிமுகதான் நான் மாவட்ட செயலாளர் என்றால், இணை செயலாளர் ஒரு பெண்தான்.. இப்போ எங்கள் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, பெண்களுக்கென தனி இடத்தை தந்து வருகிறோம். அம்மா ஆட்சியில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.. தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை, பாலுட்டும் பெண்களுக்கு தனி அறை., இப்படி எத்தனையோ திட்டங்களை பெண்களை முன்னிலைப்படுத்திதான் அம்மா கொண்டுவந்தாங்க.. அந்த வகையில், எப்போதுமே பெண்களுக்கு அதிமுக முக்கியத்துவம் தரும்’