மதமாற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள் தலித்துகளின் முன்னேற்றத்திற்கு எந்தப் பணியும் செய்யாத அரசியல்வாதிகள் அவர்களை மதமாற்றம் செய்யும் கூட்டத்துடன் கைகோர்த்து அந்தப் பணியை திறம்பட செய்து வருகிறார்கள். கட்டாயமதமாற்ற தடை சட்டம வரப்போகிறது என்று கூறினால் போதும் பொங்கி எழுந்து போராட்டத்தில் குதிக்கும் போலி போராளிகள் அனைவரும் இந்த சம்பவம் நடக்கும்போது எங்கே சென்றார்கள் தமிழகத்தில் மதமாற்றம் நடந்து கொண்டிருப்பது அப்பட்டமாக வெளியே தெரியும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது இதை ஏன் என்று கேட்டால் மதம் மாறியவர்கள் மூலமாகவே ஒரு அறிக்கையை வெளியிட்டு அதை திறம்பட செய்து வருகிறார்கள் இப்படிப் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது இதை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசோ வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது எந்த ஒரு விசாரணையும் கிடையாது இதுகுறித்து இந்து அமைப்புகள் புகார் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கையும் கிடையாது விசாரணை செய்தால்தானே எது உண்மை என்று தெரிய வரும் . இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு மதமாற்றத்திற்கு துணை போகிறதா என்று இந்து அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றனர் அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம்
தேனி அருகே சாதிய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்காக 8 குடும்பங்களைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலித்களாக இருப்பதால் சுயமரியாதை கிடைப்பதில்லை எனக் கூறி கடந்தாண்டு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தலித் சமுதாயத்தினர் இஸ்லாம் மதத்தை தழுவினர். மாநிலம் முழுவதும் பெரும் பேசு பொருளான இச்சம்பவத்தைப் போல தேனியிலும் தற்போது தலித் சமுதாயத்தினர் 40பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது டொம்புச்சேரி கிராமம். பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் அப்பகுதியில் தலித் சமுதாயத்தினரும் ஏறக்குறைய நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் சாதிய வன்கொடுமைகளால் நிகழும் தாக்குதலில் இருந்து மீள்வதற்காக டொம்புச்சேரி கிராமத்தில் வசிக்கும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 8 குடும்பங்களில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 40பேர் அன்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
பேட்டி : கலைக் கண்ணன் ( எ) முகம்மது இஸ்மாயில் – டொம்புச்சேரி.
இந்து தலித்தாக இருந்த போது குறிப்பிட்ட கோவில்களுக்கு எங்களால் செல்ல முடியாது. ஆனால் இஸ்லாமியராக மாறிய பின்பு, எந்த பள்ளிவாசலுக்கும் சென்று எங்களால் இறை வணக்கம் செலுத்த முடிகிறது. கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட இரட்டைக் குவளை முறை தற்போதும் சில இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது. இதை விட கொடுமையானது தலித்களாக இருப்பதால் முடி திருத்தம் செய்ய மறுக்கப்படுகிறது. இதற்காக அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று முடித்திருத்தம் செய்து கொள்ளும் சூழலில் வாழ்ந்து வந்தோம்.
மேலும் அடிக்கடி நிகழும் தாக்குதலுக்கு பள்ளி செல்லும் தலித் மாணவர்களும் தப்புவதில்லை. இதனால் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு ஏற்படுவதால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்படைகிறது. தொடர்ந்து சிறு வயதில் இருந்தே அனுபவித்து வந்த இது போன்ற சாதிய வன்கொடுமைகளில் இருந்து மீளவே இந்த இஸ்லாம் மதமாற்றம் என்கிறார் முகம்மது அலி ஜின்னாவாக மாறிய வைரமுத்து.
கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பயந்து காடு ஆறு மாதம், வீடு ஆறு மாதம் என வாழ்ந்து வருகிறோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு, குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வது கேள்விக்குறியானது. இது போன்ற துயரங்களில் இருந்து விடுபடவே குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டோம். இஸ்லாமியராக மாறிய பின் வெளியூர்களில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதாகவும், உள்ளூரிலும் விரைவில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறுகிறார் யாசர் அராபத்-தாக மாறிய வீரமணி.
ஆசை வார்த்தைகள் கூறியோ, கட்டாயப்படுத்தியோ இங்குள்ள தலித்களை நாங்கள் கட்டாய மதமாற்றம் செய்யவில்லை.
வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாட்டில் ஏற்றத்தாழ்வுகளின்றி அனைத்து தரப்பு மக்களையும் சகோதரத்துடன் நேசிக்கும் சூழல் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.