Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கோட்ட ஆய்வாளரின் சதி செயலால் வில்லங்கத்தில் வசமாக மாட்டிக் கொண்ட வட்ட அதிகாரி..!!

0

புதிய கோட்ட அதிகாரியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கி போய் நிற்கும் கோட்ட ஆய்வாளர்..!!

“நிழல் உலக தாதா போன்று தலைநகரில் இருந்து கொண்டே திருச்சியை ஆட்டிப் படைக்கும் ஆய்வாளர்” என்ற தலைப்பில் நமது T நியூஸ் செய்தி குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில் முன்னாள் கோட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் பெற்ற நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக சம்பந்தப்பட்ட வட்ட அலுவலரின் அறிக்கையும் இல்லாமல், விசாரணை எதுவும் மேற்கொள்ளாமலே பல லட்சங்களை வாங்கிக் கொண்டு விமான நிலைய அருகிலுள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குதாரர் பெயருக்கு நகரளவை கணக்கில் திருத்தம் மேற்கொள் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் வந்துள்ளது

முன்னாள் கோட்ட ஆட்சியர் உத்தரவு வட்ட அலுவலகத்திற்கு கிடைக்கப் பெறாத நிலையில், கோட்ட ஆய்வாளர் செல்போனில் புகைப்படமாக எடுக்கப்பட்ட உத்தரவு நகலை அடிப்படையாகக் கொண்டு கணினியில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வட்ட அலுவலக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் லட்சங்களை வாரி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. கைபேசியில் இடைவிடாமல் தொடர்பு கொண்டு
நெருக்கடி கொடுத்ததன் காரணமாக கணினி வாயிலாக நகரளவை கணக்கில் திருத்தங்கள் மேற்கொள் வட்ட அலுவலர்களின் ஒப்புதலுடன் இணையதள நகரளவை திருத்த மனு கோட்ட அதிகாரிக்கு கடந்த வாரம் சென்ற நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கோட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வட்ட அலுவலரை நேரில் அழைத்து முன்னாள் கோட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட நகரளவை திருத்த விண்ணப்பங்கள் அனைத்தையும் ரத்து செய்து அதிரடி உத்தரவு வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் பல லட்சங்களை வாங்கிய கோட்ட ஆய்வாளரும், பணம் சப்ளை செய்த ஆட்சியர் அலுவலக ஓட்டுநரின் சகோதரரும் மற்றும் வட்ட அதிகாரி உட்பட அனைவரும் *”திருடனுக்கு தேள் கொட்டியது போல்”* வாங்கிய லட்சங்களை திருப்பி கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாம். இதனால் பல புதிய தகவல்கள் வெளிவர உள்ளது விரைவில்

இதற்கும் மேலாக மாவட்ட அமைச்சரின் வலதுகரமாகவும் மற்றும் மாநகராட்சி முக்கிய பதவியில் உள்ள பிரமுகரின் துனைவிடம் முறைகேடான பட்டா வாங்கி தருவதாக கூறி லட்சங்களை சுருட்டியதும் குறித்த திடுக்கிடும் தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்