காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திமுகவினர் போராட்டம் கோவையில்.!!!!.. செந்தில்பாலாஜியின் ரகசியத் திட்டமா??..
கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வார்டை ஒதுக்க கூடாது என வலியுறுத்தி சுண்டக்காமுத்தூர் பகுதி திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளை பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இது வரை காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள், சி.பி.ஐ கட்சிக்கு 4 வார்டுகள், மதிமுகவிற்கு 3 வார்டுகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு வார்டு என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தபட்டு வருகின்றது. இதுவரை எந்தெந்த வார்டுகளில் யார் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ரகசிய திட்டமிட்டிருப்பதாக திமுக கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது