Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

முதல்வரின் முகவரி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறான தகவலை…

0

முதல்வரின் முகவரி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறான தகவலை வழங்கும் நில அளவை உதவி இயக்குனர் நாகமுத்து மீது தமிழக முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொது மக்களின் குறைகளை களைந்திட ஒருங்கிணைந்து செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய முதலமைச்சரின் குறைதீர்க்கும் மேலாண் அமைப்பு (IIPGCMS) (CM Helpline) தமிழக முதல்வர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றது.

திருச்சி மாவட்டத்தில் நில முறைகேடு சம்பந்தமாக முதல்வர் தனிப் பிரிவிற்கு இணையதள வாயிலாக பதிவு செய்யப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மேல் நடவடிக்கைக்காக ஒதுக்கப்படும்.

அப்படி ஒதுக்கப்படும் புகார்கள் மீது நில அளவைத் துறையில் உள்ள அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகவே சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அதற்கு மாறாக புகாருக்கு துளியும் சம்பந்தமே இல்லாத வேறொரு தகவலை பதிலாக கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் நாகமுத்துவிற்கும் முதல்வர் தனிப்பிரிவில் நில ஆக்கிரமிப்பு, நில அளவீடு மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட நில அளவை பிரிவிற்கு முதல்வரின் முகவரி மூலமாக கொடுக்கப்பட்ட புகார்கள்

1) Reference Number: 8010483 & 8010554

Petition Details:

திருச்சி மேற்கு வட்டம், பிராட்டியூர் கிழக்கு கிராமம், பழைய புல எண் 158/21I க்கு, வார்டு: AL பிளாக்:36 நகர புல எண்: 26-ல் உள்ள 0.7757.0 சதுர மீட்டர் தமிழ்நாடு அரசு நகர்புற மிகை வெற்று நிலத்தில் திருச்சி மேற்கு நில அளவை பிரிவு அலுவலர்கள் செய்த முறைகேடு குறித்த புகார்

2) Reference Number: 7995659

Petition Details

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 4/1- ல்* 3.1607.0 சதுர மீட்டர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காத திருச்சி மேற்கு வட்ட சர்வேயர் பரிமளா மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரும் மற்றும்

3) Reference Number: 8010585

Petition Details:

நகரளவை கணக்கில் திருத்தம் செய்ய அரசு அலுவலகத்தில் போலி ஆவணங்கள் ஏற்படுத்திய கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் மீது குற்றவியியல் நடவடிக்கை எடுக்க கோரிய புகார் உட்பட மேற்கண்ட நான்கு புகார்களுக்கும் (8010585, 7995659, 8010483 & 8010554) துளியும் தொடர்பு இல்லாத ஒரு பதிலை நில அளவை உதவி இயக்குனர் திரு நாகமுத்து அவர்கள் வழங்கியுள்ளார்

புகார்களுக்கான பதில்கள்

Reason For Acceptance:

மனுதாரர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், தாமலவரூபயம் கிராமம், வார்டு – ஜி, பிளாக் – 19 நகரளவை எண் -34 –ல் உள்ள மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வருவாய்துறை அதிகாரிகளுக்கு கோவில் நிர்வாகம் கோரிக்கை விடுத்து விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த 02.11.2023 அன்று மேற்படி நிலத்திற்க உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்கியது தொடர்பாக வட்ட அலுவலக அலுவலர்கள் மீது புகார் வரப் பெற்றுள்ளது.

மேற்படி புகார் மனு தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசாரணையில் உள்ளது என்ற தகவல் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் புகார்கள் அனைத்தும் வெவ்வேறு மாநகராட்சி கோட்டம், கிராமம் ,சர்வே எண்கள் என்ன ஒன்றொன்றுக்கும் மாறுபட்டு உள்ள நிலையில் நான்கு புகார்களுக்கும் தவறான பதிலையே வழங்கி உள்ளனர்.

திருச்சி மேற்கு வட்டம், , வார்டு–ஜி, பிளாக்–19 நகரளவை எண் – 34க்கு கட்டுப்பட்ட சர்வே எண் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசாரணைக் கோப்பு எதுவும் நிலுவையில் இல்லாத நிலையில், புகார் மனு அனைத்திற்கும் சம்பந்தம் இல்லாத வகையில் முதல்வர் தனிப்பிரிவிற்கு பதிலாக கொடுத்து தமிழக முதல்வர் பிரிவை ஏமாற்றுவதுடன், எந்த நோக்கத்திற்காக இந்த பிரிவு உள்ளதோ அதை சீர்குழைக்கும் விதமாக திருச்சி மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் நாகமுத்து அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொது மக்களால் கொடுக்கப்பட்டுள்ள புகார்களுக்கான பதில்களை காணும் போது இது முழுக்க முழுக்க பொறுப்பை தட்டிகழிக்கும் செயலாக உள்ளதாகவும், மெத்தன போக்கில் செயல்படும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இது தொடர்பாக அதிரடி உத்தரவை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்