Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

குடியுரிமை சட்டத்தை சுற்றியுள்ள கட்டுக்கதைகளை நீக்குவோம் மற்றும் இந்தியாவின் உள்ளடக்கிய கலாச்சார கட்டமைப்பை நிறுவுவோம்

0

குடியுரிமைச் சட்டம் பற்றிய புரிதலில்லாத பாரபட்சமான போக்கு நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது. இதை ஒரு கருவியாக பயன்படுத்தி பல தரப்புகள் சிறுபான்மையினரை அதிலும் முஸ்லீம் சமூகத்தினரை சட்டத்தின் சரத்துக்கள் பற்றிய ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது.
பழங்குடியினர் பகுதிகளில் இச் சட்டத்தின் சரத்துகள் சரத்து 371 மற்றும் உள் நுழைவு அனுமதி ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்துள்ளது என்பது போன்ற பூதாகார கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையில் உள்ள அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவின் பழங்குடியினர் பகுதிகளில் சிஏஏ சட்டம் பொருந்தாது என்பதை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் கூறப்போனால் மணிப்பூரிலும் இச்சட்டம் பொருந்தாது. சரத்து 371 ன் முக்கிய நோக்கம் வடகிழக்கு இந்தியாவில் வாழும் பழகுடியின மக்களின் மொழி கலாச்சார மற்றும் சமூக அடையாளங்களை காப்பது CAA யின் எந்த ஒரு சரத்தும் சரத்து 371 மீறாது.
வங்காளதேசத்தில் இருந்து புதிய இடப்பெயர்வுக்கு இச்சட்டம் வழிவகை செய்யும் என்பது மேலும் ஒரு தவறான கருத்தியல். துன்புறுத்தலுக்கு உள்ளான அண்டை நாட்டு சிறுபான்மையின குடியேறிகளுக்கு சட்டரீதியான தகுதியை இச்சட்டம் வழங்குகிறது. 31 12 2014 ஐ இச்சட்டம் இறுதி தேதியாக குறிப்பிடுகிறது அதற்குப் பிறகு இச் சட்டத்தின் சரத்துக்கள் வேறு நாட்டு மத சிறுபான்மையினருக்கு பொருந்தாது என்பதை தெளிவாக்குகிறது. வங்கதேசத்தில் உள்ள இந்து மக்கள் தொகை கடந்த சில ஆண்டுகளில் மிகவும் குறைத்துள்ளது, ஏனெனில் இச்சட்டம் தேசத்தின் அனைத்து பகுதிகளுமானது மாறாக அது அசாமுக்கு மட்டுமல்ல. வங்க மொழி அசாமின் இரண்டாவது அலுவலக மொழியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் பெரும்பாலான இந்துக்கள் அசாமின் பாராக் பள்ளத்தாக்கில் குடியேறிவிட்டனர். அந்த வங்காள இந்துக்கள் அசாமி மொழி மற்றும் கலாசாரத்திற்கு முன்பே பழக்கப்பட்டு விட்டனர்.
எனவே CAA ஊடுருப்புவர்களை ஊக்குவிற்காத்து. உண்மையில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுபவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பது ஒரு அரசியல் அமைப்பு செயல்முறை மட்டுமே ஆகும்.
CAA பற்றி விஷக்கிருமிகளின் தவறான கட்டமைப்பினுடான ஆசையை நாம் தகர்த்தெறியும் நேரமிது. இது மற்ற சக நாட்டு மக்களின் பயமற்ற கண்ணியமான வாழ்வை உறுதியாக்குகிறது. நாட்டின் சிறுபான்மையின குடிமக்களின் உரிமைக்காக இச்சட்டம் கேள்வி எழுப்புகிறது. உண்மையில் இந்தியாவிற்கு அடைக்கலமாக வந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமைக்கான உரிமைகளை இந்தியா எப்போதும் வழங்குகிறது. ஏனென்றால் இந்தியா உள்ளடக்கிய சமூக மற்றும் கலாச்சாரத்திற்காக அறியப்படும் ஒரு நாடு. மற்றும் பல ஆண்டுகளாக அனைவரையும் ஏற்றுக்கொண்டு அரவணைத்து வருகிறது. CAA என்பது அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் மகத்துவமான வெளிப்பாடே ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்