கிறிஸ்துவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என, டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என, டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஷீபா; பாதிரியார். இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:புதுக்கோட்டை மாவட்டம், திம்மயம்பட்டியில், கர்ப்பிணிக்கு பிரார்த்தனை செய்ய சென்ற கன்னியாஸ்திரிகளை, அங்குள்ள சிலர் வழிமறித்து, ஆபாசமாக பேசி உள்ளனர். இரு சக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை பறித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கிய, 3 இளம் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மொபைல் போனில், ‘வீடியோ’ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, வாத்தியார்விளை பகுதியில், 25 ஆண்டுகளாக செயல்படும், ‘குட்நியூஸ் மிஷன்’ என்ற திருச்சபையின் பராமரிப்பு பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் கொடுங்குளம் என்ற பகுதியில், 12 ஆண்டுகளாக நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் பிரார்த்தனை நடந்தபோது, உள்ளே புகுந்து மர்ம நபர்கள், அங்கு இருந்தவர்களை அடித்து விரட்டி உள்ளனர்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்கின்றன. காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து மக்களும் ஜாதி, மதம், இன பேதமின்றி, சகோதரத்துவமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:’கிறிஸ்துவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என, டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஷீபா; பாதிரியார்.