தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஞ்சலிஸ்ட் என்ஜிஓ உரிமம் ரத்து – உள்துறை அமைச்சகம் அதிரடி
வௌிநாட்டில் வாழும் சர்ச்சைகுரிய நன்கொடையாளர் கோஸ்பல் பார் ஆசியாவிடமிருந்து இந்தியாவிற்கு முறைகேடாக பல கோடி ரூபாய் நிதி என்ற பெயரில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து வௌிநாட்டில் இருந்து முறைகேடாக இந்தியாவிற்கு வரும் நிதி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தனது ரகசிய விசாரணையை தொடங்கி நடத்தியது. இந்த விசாரணையில்….. கர்நாடகாவை தலையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹோலி ஸ்பிரிட் மினிஸ்ட்ரீஸ் என்ற கிறிஸ்தவ மிஷனரி2017 முதல் 2020 வரை வௌிநாட்டு நிதியாக வந்த 49 கோடி ரூபாயை முறைகேடாக பெற்றுள்ளது தொிய வந்தது. இதே போல தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஸ்சலிஸ்ட் என்ஜிஓவினுடைய நியூ ஹோப் பவுண்டேஷனும் 42 கோடி ரூபாய் வௌிநாட்டு நிதியினை முறைகேடாக பெற்றுள்ளது தொிய வந்தது. மேலும் வதோராவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இஸ்லாமிய என்ஜிஓ அமைப்பான ஆப்மியும் முறைகேடாக வௌிநாட்டு பணம் நிதி என்ற பெயரில் வருவதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அந்த 3 அமைப்புகளின் உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் நிதிகளை கணக்கில் காட்டாமல் மோசடி செய்துள்ளது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது