திருச்சி கோட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்திரா காந்தி மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் விடுதி அறையில் தங்கி படிக்கும் மாணவிகள் கடந்த சனிக்கிழமை இரவு சப்பாத்தி சாப்பிட்டதாக தெரிகிறது. அன்றிலிருந்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று உபாதை இருந்ததுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு விடுதி அறையில் உள்ள மாணவிகள் தோசை சாப்பிட்ட பிறகு மீண்டும் பிரச்சினை இருந்ததால் திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் 15 மாணவிகளும், எஞ்சிய மாணவிகள் 12 பேர், திருச்சி பாபு ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்கள். இதில்
புறநோயாளியாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்ற 27பேரும் இன்று காலை குணமாகி கல்லூரிக்கு திரும்பினார்கள். இந்த நிலையில், தற்போது மீண்டும் புதிதாக 12 மாணவிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதற்கிடையில் தகவல் அறிந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மகளிர் விடுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர் பிறகு அங்கிருந்த உணவுக் கூடத்தை பூட்டி சீல் வைத்தனர்.
திருச்சியில் தனியார் கல்லூரியில் மாணவிகள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் இந்த கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.