பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கழுத்தை அறுத்து கொல்லப்பட்டான்
புது தில்லி · ஜம்முவில் உள்ள சுஞ்ச்வான் ராணுவ முகாமில் 10 பிப்ரவரி 2018 பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட காஜா ஷாஹித் (மியான் முஜாஹித்) கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தளபதியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆயுதம்தரித்தவர்களால் கடத்தப்பட்டார். என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும்பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அவரை தேடி வந்தது. இந்த சம்பவத்தில் யாரும் உரிமை கோரவில்லை.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட 6 வீரர்கள் உயிரிழந்தனர். ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 24 மணி நேரம் நீடித்த என்கவுன்டரில் அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியாவால் தேடப்பட்டு வந்த 18 பயங்கரவாதிகள் கடந்த 20 மாதங்களில் பல்வேறு நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.