இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாகக் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வருகிறது, இந்தத் தொற்று பரவலை குறைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் பீதியில் அதிகப்படியான பொருட்களை வாங்கிக் குவிக்கத் துவங்கியுள்ளனர்.இந்தியாவில் பல மாநிலங்கள் அடுத்தடுத்துக் கொரோனா தொற்றைத் தடுக்க லாக்டவுன் அறிவித்து வரும் நிலையில் கடந்த 7 நாட்களில் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், சோப், சுகாதாரப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் என மக்களின் தினசரி பயன்பாட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களின் விற்பனையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.இந்தியாவில் பல மாநிலங்கள் அடுத்தடுத்துக் கொரோனா தொற்றைத் தடுக்க லாக்டவுன் அறிவித்து வரும் நிலையில் கடந்த 7 நாட்களில் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், சோப், சுகாதாரப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் என மக்களின் தினசரி பயன்பாட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களின் விற்பனையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளதாலும், மக்கள் கூடுதலான நேரம் வீட்டில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் காரணத்தாலும் மக்கள் மத்தியில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த 7 நாட்களின் ரீடைல் கடைகளில் மட்டும் அல்லாமல் ஆன்லைன் வர்த்தகத் தளத்திலும் விற்பனை பெரிய அளவில் உயர்ந்துள்ளதுமக்கள் தங்களது அடிப்படைத் தேவையான பொருட்களையும் தற்போது ஆன்லைன் மூலம் பெறும் சேவை வந்துள்ளதால் 3வது அலையாகக் கருதப்படும் தற்போதைய கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நேரத்தில் மக்கள் அதிகளவில் ஆன்லைனில் தளத்திலேயே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.டெல்லி, மும்பை, சென்னை உட்பட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வரும் வேளையில் ஆன்லைன் வர்த்தகம் 7 நாட்களில் 10-15 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சாக்லேட் மற்றும் குளிர்பானங்களின் ஆன்லைன் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளதாக ஆன்லைன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சில வாரங்களுக்கு முன்பாகவே கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கணித்து உற்பத்தியை அதிகரித்துத் தேவையான அளவிற்கு இருப்பு வைத்துள்ளது.