சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் காலூன்றி தன்னுடைய வெற்றிக் கொடி நாட்டியBJP இதைக் கொண்டாடி வருகிறார்கள் இந்த நிலையில் இந்த செய்தி பொதுமக்களிடம் போய் சேர்ந்து விட்டாள், எங்கே மக்கள் விழித்துக் கொள்வார்களோ பிஜேபி காலூன்றி விட்டது என்று தெரிந்து கொள்வார்கள். என்ற அர்த்தத்தில் கதற தொடங்கிவட்டார் திருமாவளவன் அவர்கள் என்று நெட்டிசன்கள் மற்றும் பாஜக தொண்டர்களும் கிண்டலடிக்க தொடங்கி விட்டார்கள். திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது.
பா.ஜ.கவின் மதவாத அரசியலுக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் அதை வைத்துக்கொண்டு தமிழகத்தில் அவர்கள் காலூன்றி விட்டார்கள் என கதை கட்டுவது கற்பனை மாயை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் கூட்டணியில் இடம்பெற்ற நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துக் கூறினார். அவருடன் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘பெருவாரியான நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை தி.மு.க தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என தொடர்ச்சியாக கூறி வந்தேன் என்று மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 8 மாத கால அ.தி.மு.க அரசின் மதிப்பிற்கும், தி.மு.க தலைமையிலான கூட்டணியின் நம்பகத்தன்மைக்கும் மக்கள் அளித்திருக்கும் மாபெரும் பரிசு இந்த வெற்றி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதை தமிழகத்தில் பா.ஜ.க வலிமை பெற்றுவருவதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்கு இங்கு வாய்ப்பில்லை.
இது பா.ஜ.கவின் மதவாத அரசியலுக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் அதை வைத்துக்கொண்டு தமிழகத்தில் அவர்கள் காலூன்றி விட்டார்கள் என கதை கட்டுவது கற்பனை மாயை. தி.மு.க தலைமையிலான கூட்டணி சமூகநீதி கூட்டணி. தி.மு.க அரசு சமூக நீதி அரசு. எனவே, தமிழ்நாட்டில் சனாதான சக்திகளுக்கு மட்டுமல்ல. அவர்களுக்கு துணை போகுபவர்களுக்கும் இடமில்லை என மக்கள் நிரூபித்துள்ளார்கள். இந்த வெற்றியை தொடர்ந்து தமிழக முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறோம்.