Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி……

0

சென்னை: சென்னை மேற்கு, நெல்லை, கோவை உள்பட 8 மாவட்ட பாஜக முழுமையாக கலைத்து பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கட்சி மாவட்டங்களில், கீழ்க்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது.

புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக கீழ்க்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.

கட்சி மாவட்டங்களின் பெயர்கள்

1. திருநெல்வேலி
2. நாகப்பட்டினம்
3. சென்னை மேற்கு
4. வடசென்னை மேற்கு
5. கோயம்புத்தூர் நகர்
6. புதுக்கோட்டை
7. ஈரோடு வடக்கு
8. திருவண்ணாமலை வடக்கு

புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்

1. திருநெல்வேலி- கட்டளை எஸ் ஜோதி-
2. நாகப்பட்டினம்- டி வரதராஜன்
3. சென்னை மேற்கு- மனோகரன்
4. வடசென்னை மேற்கு- டி.என். பாலாஜி
5. கோயம்புத்தூர் நகர்- ஏ.பி. முருகானந்தம்
6. புதுக்கோட்டை – செல்வம் அழகப்பன்
7. ஈரோடு வடக்கு- எஸ். எம். செந்தில்குமார்
8. திருவண்ணாமலை வடக்கு- ஏழுமலை

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த ரிசல்ட் கொடுக்காத மாவட்டங்களின் நிர்வாகிகளின் பதவிகளை அண்ணாமலை பறித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்