Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

சர்ச்சைக்கு அப்பால்: குடியுரிமை திருத்தச்  சட்டம் பற்றிய  ஒரு தனிப் பார்வை

0

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) டிசம்பர் 2019 இல் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்தியாவில் பல்வேறு சர்ச்சைக்குரிய விவாதங்களை தூண்டியதுடன் மட்டுமில்லாமல் பல்வேறு போராட்டங்களுக்கும் வித்திட்டது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த சட்டம், ஆதரவையும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து சற்று விலகி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை தனித்து அணுகுவதும், அதற்கு எதிரான போராட்டங்களுடன் பின்னிப்பிணைந்துள்ள தவறான தகவலை களைவதும் முக்கியம். CAA மற்றும் NRC தொடர்பான சட்டத்தைச் சுற்றியுள்ள சிக்கல்களை அவிழ்க்கவும், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரு நியாயமான தீர்வுக்கு வழிவகுக்கவும் தகவலறிந்த விவாதங்களை வளர்ப்பது அவசியம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) புரிந்து கொள்வதற்கு, அதை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து பிரித்து பார்ப்பது அவசியம். CAA மற்றும் NRC தொடர்பான பல தவறான தகவல்கள் 2019 ஆம் ஆண்டு குழப்பமான சூழநிலையை ஏற்படுதியதுடன் மட்டுமில்லாமல் பொதுமக்களை வீதிகளில் இறங்கி போராடவும் செய்தது. CAA மற்றும் NRC வெவ்வேறு என்பதை நினைவில் கொள்வது இன்றியமையாதது. இரண்டையும் ஒன்றிணைப்பது அவற்றின் உண்மையான நோக்கத்தை மறைத்துவிடும். CAA பற்றிய தவறான புரிதலே 2019 ஆம் ஆண்டு போராட்டதிர்க்கு வழிவகுத்தது என்பதை உறுதிசெய்வதற்க்கும், CAA பற்றிய தவறான கருத்துகளை போக்கிடவும் சரியான விவாதங்கள் அவசியமாகிறது. இந்தியா, ஒரு வலிமையான இந்து மத பெரும்பான்மை கொண்ட நாடாக மட்டுமல்லாமல், அண்டை நாடுகளில் இருந்து ஒடுக்கப்பட்ட மத சிறுபான்மையினரின் சரணாலயமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. CAA குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இதில் முஸ்லீம்களை சேர்க்காதது இந்திய சமூகத்திற்குள் அவர்களை ஓரங்கட்டுவதற்கான முயற்சியல்ல, மாறாக அண்டை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள்  அதே அளவிலான துன்புறுத்தலை எதிர்கொள்ளாதாதை வலியுறுத்துவதேயாகும். இந்தியாவில் முஸ்லீம்களுக்கு குடியுரிமைக்கான மாற்று வழிகள் வழங்கப்படுகின்றன. அண்டை நாடுகளில், குறிப்பாக பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய பிரச்சினையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அணுகுவது அவசியம். இந்த நாடுகளில் மதமாற்றங்களும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளும்  அதிகமாக உள்ளதால் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மதமாற்றம் தொடர்பான அட்டூழியங்களை எதிர்கொண்டவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அடைக்கலம் அளித்து, இந்தியாவில் சிறந்த வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குவதற்கு CAA முயற்சிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சிக்கல்களுடன் இந்தியா போராடும் நிலையில், அதை நுணுக்கமான அணுகுமுறையுடன் அணுகுவது மிகவும் முக்கியம். இந்த சட்டத்தை தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) உடன் தொடர்புபடுத்தாமல் தனித்தனியாக பார்க்க வேண்டும், மேலும் தவறான தகவல்களை போக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட இந்து சிறுபான்மையினருக்கு புகலிடமாக இந்தியா விளங்குவதை அங்கீகரிப்பது இன்றியமையாதது. தவறான கருத்துகளை களைந்து சரியான தகவல்களுடன் விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியா குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதன் உண்மையான நோக்கம் மற்றும் கோட்பாடுகளுடன் அமல்படுத்த முடியும்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்