Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

புத்தாண்டு தொடக்கத்தில் வாலிபர் கொலை….

0

  ஜி.கே.சேகரன்,

   புத்தாண்டை முன்னிட்டு நடந்த குத்தாட்டத்தினால் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

  வேலூர் மாவட்டம் ,பேரணாம்பட்டு அடுத்த கொத்தமாரிகுப்பம் கிராமத்தை சேர்த்தவர். விஜிகுமார், மேல் பட்டியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

   இவரது மகன் வினோத் (22) ஓசூர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த தனது நண்பர்களான ஆகாஷ் (21), அசோகன் (44),  மாரியம்மன் கோயில் அருகில் மது அருந்திவிட்டு ஆடல் பாடல் குத்தாட்ட நிகழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.இதில் ஒருவருக்கு ஒருவர் தகராறு ஏற்பட்டு தகராறு கைகலப்பாக மாறி உள்ளது.

   இந்நிலையில் ஆகாஷ் மற்றும் அசோகன் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்தை குத்தி உள்ளனர். இதில் வினோத் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  இச்சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஆகாஷ் மற்றும் அசோகன் ஆகியோரை  கைது செய்து  விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்