Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் ……

0

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் இல்லத்தரசிகள் எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் ரத்து விவசாய கடன் ரத்து நகை கடன் ரத்து இப்படி பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து விட்டு அதை வாக்குறுதியாகும் சொல்லிய திமுக தற்போது மேலும் பல வாக்குறுதிகளை கொடுக்கிறது இது ஒருபுறமிருக்க தன்னுடைய கட்சி தொண்டனின் மகள் லாவண்யா தற்கொலை செய்து கொண்ட போது மௌனம் காத்தது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் தன்னுடைய கட்சி தொண்டனின் மகளுக்கு இந்த கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன என்று பிஜேபியினர் கேள்வி எழுப்பியுள்ளனர் இவர்களுடைய விசாரணை விதம் சரியில்லாத காரணத்தினால் ஒருதலைப்பட்சமாக விசாரணை மேற்கொள்வது என்று பல காரணத்தினால் மதுரை உயர் நீதிமன்றம் இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்றி உள்ளது இது ஒன்றே போதும் சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் தற்போது எப்படி இருக்கிறது என்று என்று வினா எழுப்புகிறார்கள் பிஜேபியினர் பொங்கல் பரிசு பொருள்களின் நடந்த ஊழல் தற்போது நீதிமன்ற வழக்காக மாறியுள்ளது இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் கடந்த எட்டு மாத ஆட்சி காலத்தில் நடைபெற்ற சிறப்பு அம்சங்கள் மேலும் பிஜேபியினர் கூறுகையில் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளையும் அதை மூடி மறைப்பதற்கு பல பிரச்சனைகளை திசை திருப்புவது இனிமேல் திராவிட கட்சிகள் செய்ய முடியாது தமிழகத்தில் மேலும் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு உள்ள காணொளியில்

அதில்மாநிலஉரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும். சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். தப்பு செய்வது யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்படும். திமுக இந்து மதத்துக்கு எதிரானது என்று எதிரணியினர் ஒரு பொய்யான குற்றச்சாட்டை பரப்புகிறார்கள். அதனால் நான் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். திமுக ஆட்சியில் எல்லா மத மக்களும் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்தப்படுவார்கள். அவர்களின் மத நம்பிக்கைகள் மதிக்கப்படும். சமூக நீதி, சமத்துவம் பாதுகாக்கப்படும். லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி தான் எனது முதன்மையான நோக்கம். எல்லா துறையும் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தடை செய்யப்படும். எனது சுய நலத்துக்காக நான் யார் காலிலும் விழ மாட்டேன். எனது சுய நலத்துக்காக நான் எந்த சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், உங்களில் ஒருவனாக எப்போதும் களத்தில் வந்து நிற்பேன்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்