Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கலைஞர் உணவகத்தில் சிக்கன் பிரியாணி: மெனுவில் வேற என்ன இருக்கு?

0

கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் தொடக்கப்பட்டது. மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமண உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில், ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ.5க்கு கலவை சாதங்கள், இரவில் ரூ.3க்கு சப்பாத்தி போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.அம்மா உணவகம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கைவிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதனை தொடருமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது அனைவரது வரவேற்பையும் பெற்றது. இதனிடையே, நிதி நெருக்கடி காரணமாக அம்மா உணவகத்தில் இரவு நேரங்களில் விற்பனை செய்யப்பட்ட சப்பாத்தி நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்படுகிறது.இந்த சூழலில், தமிழகம் முழுவதும் 600 கலைஞர் உணவகம் திறக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருக்கிறார். இது அம்மா உணவகங்களை மூடுவதற்கான முன்னெடுப்பு என்று அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில், கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வரும் தங்களது தலைவர்களின் பெயரில் புதிய திட்டங்களை தொடங்குவது வழக்கம்தான். அந்த வகையில்தான் கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றனர்.

கலைஞர் உணவகத்தில் வழங்கப்படும் உணவுப் பட்டியல் குறித்து அவர்களிடம் விசாரிக்கையில், முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு, ஆட்டுக்கறி என பல்வேறு ஐட்டங்களை மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்படுவது போல், கலைஞர் உணாவகங்களுக்கும் முட்டைகள் கொள்முதல் செய்யப்படும். நாமக்கல் கோழிப்பண்ணைகளில் இருந்து கோழிகளை வாங்கலாம். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மூலம் மீன்களை குறைந்த விலையில் வாங்கலாம். ஆனால், ஆட்டுக்கறி விலை அதிகம் என்பதால் அதுதொடர்பாக, அதாவது வேறு ஏதாவது வழங்கலாமா என்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.அம்மா உணவகங்களை போல் அல்லாமல் கலைஞர் உணவகங்களை லாபகரமாக இயக்கவும், அசைவ உணவு வகைகளை மலிவான விலையில் எளிய மக்கள் சாப்பிடுவதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால், கலைஞர் உணவகங்களில் என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்பதையும், விலைப்பட்டியலையும் முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்