தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….
இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு பார் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒளிவுமறைவும் இல்லை என விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், பார் உரிமையாளர்கள் டெண்டரில் முறைகேடுகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி. பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது