Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநில பொறுப்பாளர்கள் கூட்டம், இதில் புதிய சட்ட மசோதாவை பற்றி விளக்கம்

0

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் மதுரையில் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.K.பழனிகுமார், மாநில பொது செயலாளர் திரு.D.கேசவன், மாநில தலைவர் திரு.D.ராஜேஸ் சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கடந்த 1860-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம். 1872-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சாட்சிய சட்டம் உள்ளிட்ட பாரத சுதந்திரத்திற்கு முன் இங்கிலாந்து பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் இந்தியாவின் நடைமுறையில் இருந்து வரும் தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததாக இல்லை என்பதை கருத்தில் கொண்டு சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக நமது பாராளுமன்றத்தில் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது பாராளுமன்ற உறுப்பினர்களால் கடந்த ஆண்டு இயற்றப்பட்டு 01.07.2024ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம், தென் தமிழகம் வரவேற்கின்றது.

காலனிய ஆதிக்க காலத்தில் இந்தியர்களை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலேய பாராளுமன்றம் கொண்டு வந்து அவ்வப்போது திருத்தங்களுடன் நடைமுறையிலிருந்த சட்டத்தினை காலத்திற்கு உகந்ததாக இல்லாத சட்டங்களை முழுமையாக நீக்கிய இந்திய பாராளுமன்றத்தை நமது சங்கம் பாராட்டுகிறது.

01.07.2024-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களுக்கு தழ்நிலைக்கு உகந்த முறையில் இயற்றப்பட்டுள்ளது. முதல் முதலாக இந்திய பாராளுமன்றத்தால் இந்திய மக்களுக்காக இந்தியர்களால் நடைமுறைப்படுத்தப்பட போகும் குற்றவியல் சட்டத்தின் பலன்களை அனைத்து தரப்பு மக்களும் பெற்றிட வேண்டுமாய் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம். தென்தமிழகம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் மேற்படி மூன்று புதிய சட்டங்களையும் முழுமையாக அமல்படுத்தி இந்திய நீதி பரிபாலனத்தை சிறந்த நிலையை அடையச் செய்தும், நீதித்துறை, காவல்துறை மற்றும் சட்டத்துறை சார்ந்து செயலாற்றும் அனைத்து தரப்பினர்களையும் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம், தென்தமிழகம் பாராட்டுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சட்டம் என்று மாற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையில்தான் இந்த சட்டங்களானது உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படி சட்டத்தின் மூலம் இது நாள் வரை வழங்கப்பட்டு வந்த நண்டனை என்பதற்கு பதிலாக ஒரு சில குற்றங்களுக்கு சமூக சேவை பணி செய்வதையும் இந்த சட்டம் வலியுறுத்தியுள்ளது. மேலும் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தை பாரதிய மக்கள் பாதுகாப்பு சட்டம் என்றும் சாட்சிய சட்டத்தை பாரதிய சாட்சிய சட்டம் என்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படியான மூன்று சட்டங்களும் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் வழங்கிய தீரப்புகளின் அடிப்படையிலும், வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் கொண்டு வரப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் தொழிலுக்கு தள்ளுதல், கூட்டாக சேர்ந்து கொள்ளையடித்தல், கொலை செய்தல் உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் புதிய சட்டங்கள் மூலம் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மேலும் 1360 பிரிவுகளாக இருந்த சொத்து தொடர்பான குற்றங்களை ஒன்றாக்கி ஒரு பிரிவின் கீழ் கொண்டு வந்து அதன் தண்டனைகளையும் இந்த சட்டம் அதிகப்படுத்தி உள்ளது.

அதே போல் தற்பொழுது நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களையும் இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக பொய் வழக்கு பதிவு செய்யும் காவல் துறையினரை நெறிப்படுத்தும் விதமாகவும், பொய் வழக்குகளிலிருந்து அப்பாவி மக்களை காப்புற்றும் விதமாகவும் தற்போதைய சட்ட பிரிவுகள் அமைந்துள்ளன.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் அங்கிருந்தே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் விதமாக ஜுரோ FIR என்ற புதிய முறையானது இந்த கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டத்தில்

டிஜிட்டல் குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்களை குறைக்கும் விதமாகவும் டிஜிட்டல் சாட்சியங்களை எளிதாக நீதிமன்றத்தில் சமர்பிக்கும் விதமாகவும் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்ரும் விதமாகவும் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து 30 நாட்களுக்குள் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரித்து முடிக்கும் விதமாகவும் இந்த சட்ட திருத்தமானது கொண்டு வரப்பட்டுள்ளது.

அனைத்து விதமான குற்றவழக்குகளும் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் முடிக்கும் விதமாக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி சுமார் 100 ஆண்டுகளாக பாலினம் தொடர்பாக இருந்த சட்ட வரையறையை நீக்கி திருநங்கைகளையும் ஒரு பாலினமாக ஏற்று சட்ட திருத்தமானது கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நமது பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தினை வெறும் அரசியல் லாபத்திற்காக ஒரு சிலர் சட்டத்தின் பெயரை வைத்துக் கொண்டு சட்டத்தை முழுமையாக படிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டமானது கண்டிப்பாக நீதித்துறையில் மாபெரும் மாற்றத்தை உருவாக்குவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடிய விரைவில் நீதியை பெற்றுத்தரும் சட்டங்களாகத்தான் அமையும் என்பதில் எள்ளளவு மாற்றம் இல்லை.

அப்படிப்பட்ட இந்த மூன்று சட்டத்தினையும் இந்த அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் தென் தமிழ்நாடு சார்பாக வரவேற்கிறோம். என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்