About Us
தேசியமும் தெய்வீகமும் என்ற முழக்கத்தை முன்வைத்து உருவாக்கப்பட்ட சேனல் இது.
என் பெயர் பி. மணிகண்டன் வயது 54 நான் கடந்த 18 வருடங்களாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறேன்.
கடும் உண்மையான முயற்சி உடன் இந்த TNEWSTAMIL சேனலை தொடங்கி படிப்படியாக வேகமாகவும் முன்னோக்கி நகரும் சேனலாக செயல்பட்டு வருகிறது.
இந்த TNEWSTAMIL நிறுவனராகவும் இருந்து வருகிறேன். நல்ல உள்ளங்கள் நிறைய இருந்தாலும் அது தேர்ந்தெடுக்கப்பட்ட சில உள்ளங்கள் இதில் உறுதுணையாக இருந்து வருகிறது
சேனல் தொடங்கிய நோக்கம்:
நமது பாரத தேசத்தை சீர்குலைக்க நினைக்கும் அந்நிய நாட்டு சக்திகளையும், அதற்கு துணை போகும் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களால் மறைக்கப்படும் உண்மைகளை எடுத்துக் கூற வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்ட சேனல் ஆகும் TNEWSTAMIL இது.
விளம்பரத்திற்காக பத்திரிக்கை நடத்தும் பத்திரிக்கை துறையினர் தங்களுக்கு கிடைக்க கூடிய விளம்பரதாரர்களுக்கு விசுவாசத்தை காட்டுவதற்கு அவர்கள் செய்யும் தவறை மற்றும் குற்றங்களை மறைத்து விடுகின்றனர். மேலும் தாங்கள் சார்ந்து இருக்கும் கட்சியின் சித்தாந்தத்தை உள்ளடக்கிய நிறுவனமாக நடத்தி வருகின்றனர் இதனால் உண்மையை தெரிய வேண்டிய இளைஞர்களும் மற்றும் பொதுமக்களும் உண்மை அறியாமலேயே இருந்து விடுகிறார்கள் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொதுமக்களுக்கு உண்மைகளை எடுத்து கூறும் ஊடகமாக செயல்படுகிறது. இந்த TNEWSTAMIL சேனல் . நம் நாடு வல்லரசாக நாடாக மாறுவதற்கு இன்றைய இளைய தலைமுறை கையில் தான் உள்ளது என்பதை நம்பிக்கையுடன் இளைஞர்களை நோக்கி எங்கள் பயணம் தொடரும்.
இந்தச் சேனலின் நோக்கம், பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்ந்து, ஆய்வு செய்து, அறிக்கையிடுவதும், பொது நலனில் மோசடி செய்பவர்கள் செய்யும் பொருளாதார மோசடிகளை அம்பலப்படுத்துவதும் ஆகும். இந்த சேனலை உருவாக்கியவர் என்ற முறையில் என்னால் முடிந்தவரை நல்லாட்சியை ஏற்படுத்தவும், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் சாமானியர்களின் புரிதலை மேம்படுத்தவும் நானும் என் குழுவும் முயற்சி செய்கிறோம். நாங்கள் மிகவும் மதச்சார்பற்றவர்களாக இருந்து வருகிறோம், எங்களின் எந்த வீடியோக்களிலும் குறிப்பிட்ட மதம், சாதி, இனம் அல்லது மொழிக்கு எதிராக எந்த ஒரு சார்பையும் காட்டவில்லை.
எனது மட்டத்தில் ஒரு தேசியவாதியாக நான் செய்ய விரும்புவது என்னவென்றால், இளைஞர்களை பொருளாதார ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தேசத்தின் நலன்களுக்கு எது நல்லது, ஏன், எப்படி என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, அதன் மூலம் தேசத்திற்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை ஆதரவுடன் உருவாக்க வேண்டும். இளைஞர்களின்