Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

எல்லையில் இனிப்பு பகிர்ந்து புத்தாண்டு கொண்டாடிய இந்திய-சீன ராணுவம்…..

0

ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது. சீனாவும் தனது பங்குக்கு இந்திய எல்லையை அபகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.அருணாச்சல பிரதேச மாநில எல்லையை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு – மத்திய அரசுலடாக் எல்லையில் மோதல்கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.பலகட்ட பேச்சுவார்தைஇதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதில் ஓரளவுக்குதான் பலன் கிடைத்தது. பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக் கொண்டன. ஆனால் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இருந்து முழுமையாக செல்ல சீனா அடம்பிடித்து வருகிறது.அச்சுறுத்தல் கொடுக்கும் சீனாஇதுவரை 12-க்கும் மேற்பட்ட பேச்சுவார்தை நடத்திய போதிலும் இரு தரப்புக்கும் இடையே சுமுக நிலை எட்டப்படவில்லை. அருணாச்சல பிரதேச எல்லையில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது. புத்தாண்டு 2022 பிறந்துள்ளது. இந்த நிலையில் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பாரிமாறிக் கொண்டனர்.இந்திய-சீன ராணுவ வீரர்கள் புத்தாண்டு வாழ்த்துபதற்றமான சூழல் நிலவி வரும் லடாக் எல்லையின் ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக், நாதுலா மற்றும் கொங்ரா லா பகுதிகளில் இந்திய-சீன ராணுவ படையினர் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். சுஷுல் மோல்டோ மீட்டிங் பாயிண்ட், பும் லா, கேகே பாஸ், டிபிஓ பாட்டில்நெக், கொங்கலா, கொங்ராலா மற்றும் வாச்சா டாமாய் பகுதியிலும் இரு நாட்டின் வீரர்களும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.புது ஆண்டில் அமைதி மலருமா?இதேபோல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலும் இரண்டு நாட்டின் ராணுவ வீரர்களும் இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை கூறிக்கொண்டனர். மெந்தர் ஹாட் ஸ்பிரிங்ஸ் கிராசிங் பாயிண்ட், பூஞ்ச் ​​ராவ்லகோட் கிராசிங் பாயிண்ட், சகோட்டி உரி கிராசிங் பாயிண்ட், மற்றும் சில்லியானா தித்வால் கிராசிங் பாயின்ட் ஆகிய எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். இந்த 2022-ம் ஆண்டிலாவது இந்தியா-சீனா மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினை ஓய்ந்து அமைதி மலர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்