Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அடாத மழையில் பொங்கிப் பெருகிய புழல் ஏரி.. மிதக்கும் மணலியால் மக்கள் அவதி

0

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக புழல் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மணலி பகுதியில் மழை நீரோடு கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து உள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று எதிர்பாராதவிதமாக 10 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த அதிதீவிர கனமழை காரணமாக தலைநகரில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அண்ணாசாலை மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நிலையில் பல இடங்களில் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் மழை சந்தித்தனர்.ஆல்வார்பேட்டை மீனம்பாக்கம் ராயப்பேட்டை கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது மணலி, காசிமேடு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக புழல் நீர்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இரண்டு தரைப்பாலங்கலை மூழ்கடித்து அதற்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில், கால்வாய்களிலும் நீர்வரத்து அதிகரித்தது.’மனிதாபிமானமற்ற செயல்..’ தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி தெளிப்பு.. ஐகோர்ட் அதிருப்திபுழல் ஏரியில் இருந்து நீர் திறப்புஇந்நிலையில், சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக பூண்டி புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால் புழல் ஏரியில் இருந்து 1,500 கன அடி நீர் நேற்று இரவு முதல் திறந்து விடப்பட்டு உபரி கால்வாயில் நீர் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் உபரி கால்வாய் வழியாக செல்லக்கூடிய நீரானது கழிவுநீருடன் கலந்து மக்கள் வசிக்கும் பகுதியைச் சூழந்துள்ளது.இயல்பு வாழ்க்கை பாதிப்புஇதன் காரணமாக மணலி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் மழை நீருடன் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆமுல்லை வாயில் தரைப்பாலம் சடையங்குப்பம் தரைப்பாலம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு இருளர் காலனி கடப்பாக்கம் அரியலூர் செல்லக்கூடிய வழித்தடங்கள் அனைத்தும் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.வீட்டினுள் புகுந்த வெள்ளநீர்1500 கன அடி நீர் திறப்பு காரணமாக தாழ்வான பகுதிகளில் தற்போது தண்ணீர் வீட்டினுள் புகுந்து உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் அவசரத் தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்காகவும், மின்சாரன், மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய உதவிகளைகளுக்காகவும் அரசையும், தன்னார்வலகளையும் எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அரசுக்கு கோரிக்கைகடந்த மழையின்போது படகுகளை வைத்து பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைத்த நிலையில் தற்போது தரைப் பாலத்தின் மீது தண்ணீர் அதிகளவில் செல்வதால் தரைப்பாலம் வழியாக வேறு இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை மாற்று இடத்தில் தங்க வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.,.: ,

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்