Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம்.

0

புதுக்கோட்டை அருகே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி – சிறுவன் மீது குண்டு பாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம்.

மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் காலை ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள நார்த்தாமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த குண்டு பாய்ந்துள்ளது.

அந்த வீட்டில் புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் உணவருந்திக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ள நிலையில் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் தற்போது சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 10 வருடத்திற்கு முன்பாக இதேபோன்று ஒரு சம்பவம் அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபடும் போது நடந்துள்ளது.

தற்போது ஒரு சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அருகே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி – சிறுவன் மீது குண்டு பாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம்.

மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் காலை ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள நார்த்தாமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த குண்டு பாய்ந்துள்ளது.

அந்த வீட்டில் புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் உணவருந்திக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ள நிலையில் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் தற்போது சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 10 வருடத்திற்கு முன்பாக இதேபோன்று ஒரு சம்பவம் அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபடும் போது நடந்துள்ளது.

தற்போது ஒரு சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்