Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

வருகின்ற ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது

0

வங்கி சேவை நம்முடைய அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது.
நம்முடைய நாள் தினமும் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்றால் வங்கி சேவைகள் சிறப்பாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் கஷ்டம் தான். வங்கி சேவைகள் போன்றே வங்கிகளும் முக்கியமானவை. நகைக் கடன், கார் லோன், வீட்டு லோன் போன்றவற்றை வாங்க, முறையாக கணக்கை துவங்க, அல்லது ஆலோசனை பெற வங்கிக்கு செல்வது முக்கியமான ஒன்றாகும். அதனால் தான் வங்கிகள் எப்போது செயல்படும், எப்போது மூடியிருக்கும் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது.

வருகின்ற ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது ஆர்.பி.ஐ. செயல்படும் நாட்களைக் காட்டிலும் விடுமுறை நாட்கள் ஜனவரியில் அதிகமாக உள்ளது எனவே நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டும் என்றால் கீழ் கண்ட நாட்களில் திட்டமிடுவதை தவிர்ப்பது நல்லது.

ஜனவரி 1 – புத்தாண்டு
ஜனவரி 3 & 4 – சிக்கிம் புத்தாண்டான லெப்சா புத்தாண்டும் லோசூங்க் என்ற அறுவடை திருநாளும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த இரண்டு நாட்களிலும் குறிப்பிட்ட மாநிலங்களில் இருக்கும் வங்கிகளுக்கு விடுமுறை
ஜனவரி 11 – மிஷினரி டே (மிசோரம்)
ஜனவரி 12 – சுவாமி விவேகனந்தர் பிறந்த நாள்
ஜனவரி 14 : பொங்கல் / மகரசங்கராந்தி
ஜனவரி 15 : திருவள்ளுவர் தினம், உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி
ஜனவரி 18 : தைப்பூசம்
ஜனவரி 26 : குடியரசு தினம்

ஐஸ்வால், சென்னை, காங்க்டாக் மற்றும் ஷில்லாங் பகுதிகளில் ஜனவரி 1 அன்று வங்கிகள் செயல்படாது. அதே போன்று லோசூங் பண்டிகையின் போது ஐஸ்வால் மற்றும் காங்க்டாக் நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் அன்று கல்கத்தாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

சனி ஞாயிறு விடுமுறை தேதிகள்

இந்த மாதத்தில் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. கூடுதலாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை என்பதால் மொத்தமாக வார இறுதி விடுமுறை நாட்கள் 7-ஆக உள்ளது.

ஜனவரி 02 (ஞாயிறு)
ஜனவரி 08 (இரண்டாவது சனிக்கிழமை)
ஜனவரி 09 (ஞாயிறு)
ஜனவரி 16 (ஞாயிறு)
ஜனவரி 22 (நான்காவது சனிக்கிழமை)
ஜனவரி 23 (ஞாயிறு)
ஜனவரி 30 (ஞாயிறு)

வருகின்ற ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறை

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்