இந்தியாவில் வெகு வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று காரணமாக தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இரவுநேர ஊரடங்கு அமல்:
இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் அடியெடுத்து வைத்த உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் இதுவரை கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் உத்திரபிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 350க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் தொற்று மிகவும் வீரியம் மிக்கதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதனால் மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவைப்பட்டால் பாதிப்புகளின் அடிப்படையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவை பொறுத்தவரை ஓமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளாக டில்லி, மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் டில்லியில் தற்போது இரவுநேர ஊரடங்கு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.