ஓமிக்ரோன் பரவல் எதிரொலியாக பள்ளி கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் மீண்டும் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததால் பள்ளி கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள சுழற்சிமுறை வகுப்புகளிலும் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது இந்நிலையில் நாடு முழுவதும் ஓமிக்ரோன் பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் எதிரொலியாக பள்ளி கல்லூரிகளில் ரத்து செய்யப்பட்ட சுழற்சிமுறை வகுப்புகள் தொடர்ந்து நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது குறித்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது