தர்மசாலா: “ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மத்திய அரசை இயக்குகிறது என கூறப்படுவது உண்மையல்ல,” என, அதன் மூத்த தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
உலக அளவில் இந்தியா வல்லரசாக இல்லாவிட்டாலும் கொரோனா தொற்றுக்கு பின், உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளை உலகின் பல நாடுகள் பின்பற்றத் துவங்கி விட்டன. அந்த நாடுகள் இந்தியாவை குரு ஸ்தானத்தில் வைத்து பார்க்கின்றன.மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ்., தான் ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல இயக்குகிறது என சில ஊடகங்கள் சித்தரிப்பது உண்மையல்ல. ஆனால் எங்கள் ஊழியர்களில் சிலர் அரசில் அங்கம் வகிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்