Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கரூர் அருகே.. பள்ளிக்கு கேக், மத புத்தகங்களுடன் வந்த போதகர்..

0

காரில் வந்த 2 பெண்கள் உள்பட 5 பேரும் மாணவர்களுக்கு கேக் மற்றும் கிறித்துவ போதனைகள் அடங்கிய புதிய ஏற்பாடு, சங்கீதம், நீதிமொழிகள் போன்ற புத்தகங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஒரு சில மாணவர்கள் அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல பெற்றோர் அதை பார்த்து கோபம் அடைந்தனர். இந்த தகவல் கிராம மக்களுக்கு தீயாய் பரவ அனைவரும் புறப்பட்டு தனியார் பள்ளி அருகே நின்றிருந்த கிறித்துவ போதகர்களை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு சிலர் காரின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.பொதுமக்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் இருதரப்பினரிடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மதமாற்றம் செய்ய வந்ததாக கூறப்படும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தனர். கிறித்துவ மதபோதகர்கள் 5 பேரையும் பேரையும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன் பின்னரே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில் கரூரில் தனியார் பள்ளி மாணவர்களை குறிவைத்து மதமாற்றம் செய்வதாக புகார் வந்திருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்