யாருங்க சொன்னது.. தலைமறைவாக இருப்பதாக ராஜேந்திர பாலாஜி வந்து சொன்னாரா.. ஜெயக்குமாருக்கு வந்த ஆவேசம்
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக யார்கிட்ட சொன்னார்? அவர் ஒன்றும் தலைமறைவாக இல்லை… உரிய சட்ட ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தந்துள்ளார்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் மனு தள்ளுபடி நேற்று நடந்தது.. அந்த நேரத்தில் விருதுநகரில் ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தது. முன்ஜாமீன் மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது என்று தெரிந்ததுமே, ராஜேந்திர பாலாஜி உடனே, ஆர்ப்பாட்டம் முடிந்ததுமே அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பி விட்டாராம்.. ஆனால் அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை.. ஒருவேளை முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதால், ராஜேந்திர பாலாஜி கைது நடவடிக்கை இருக்குமோ என்று எண்ணி சட்டென்று கிளம்பியதாகவும், கைது நடவடிக்கைக்கு அஞ்சி அவர் தலைமறைவும் ஆகியிருக்கக்கூடும் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது
இதனிடையே காணாமல் போன ராஜேந்திர பாலாஜி பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.. அவர், பெங்களூருவில் தலைமறைவாகி உள்ளதாக ஒரு செய்தி வெளியாகி, அந்த தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை பெங்களுருக்கும் விரைந்துள்ளது.. எனவே, ராஜேந்திரபாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள்
, சென்னையில் செய்தியாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.. அப்போது, ‘தமிழுக்கு எந்த தொண்டும் ஆற்றாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்துள்ளது திமுக அரசு.. உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றியது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான்.,.. ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இல்லை, தான் தலைமறைவாக இருப்பதாக அவர் யார்கிட்ட சொன்னார்? சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்… ராஜேந்திரபாலாஜிக்கு அதிமுக துணை நிற்கும்’ என்று கூறியுள்ளார்