தமிழக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட தி.மு..க.வினர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். இப்படி அண்ணாமலை-திமுக இடையே மோதல் பெரிதாக சென்று கொண்டிருக்க திடீரென திமுக.வை புகழ்ந்து பேசியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக திருவண்ணாமலையில் நிருபர்களிடம் பேட்டியளித்த அண்ணாமலை கூறியதாவது:-முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைந்த சம்பவத்தின் போது, மீட்புப் பணியில் தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டனர். துரிதமாகப் பணியைச் செய்துள்ளனர்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ‘ உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது. பாஜக அரசின் சாதனைகள், திமுக ஆட்சி செய்யும் தவறுகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்வோம். சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிடுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க, இதுபோல் செய்கின்றனர். அதே வேளையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது. இனிமையான பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் கொண்டாடப் பரிசுத் தொகையைத் தமிழக அரசு கொடுக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்