அண்ணாமலையெல்லாம் ஒரு தலைவானா? அவரைப் பற்றியெல்லாம் கேள்வி கேள்விகேட்க வேண்டாம் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே திமுக அதிமுகவை விட திமுக – பாஜக இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. தினமும் காலை மாலை என அறிக்கை பத்திரிகையாளர் சந்திப்பு என திமுக மற்றும் அதன் முக்கிய தலைவர்களை பாஜக மாநில தலைவராக நியமிக்கபப்ட்டுள்ள அண்ணாமலை கடுமையாக விமரிசித்து வருகிறார்.
பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்ட பலரும் பாஜக ய்ஜாக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கணைகளை வீசி வருகின்றனர். இந்நிலையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி காந்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை அருகே உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் வழங்கி வருகிறார் எனவும், முடிந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் புண்படாத வகையிலேயே நடந்துக்கொள்கிறார் எனவும், அனைவருக்குமா நல்லாட்சி, மக்களாட்சியை அவர் வழங்கி வருவதாக பேசினார்.திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் தடுக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது ஆவேசமடைந்த அமைச்சர் காந்தி, அண்ணாமலையெல்லாம் ஒரு தலைவனா, அண்ணாமலையைப் பற்றி எல்லாம் நீ கேட்கலாமா? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் அண்ணாமலை படித்தவனை போல பேச வேண்டாமா?, பதவி என்பது சில காலம் தான், மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தைரியமாக அண்ணாமலை பேசி வருவதாக கடுமையாக விமர்சித்தார்.