Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஸ்டாலின் ஏரியாவில் மாநகராட்சி அடாவடி… குடியிருப்புவாசிகள் குமுறல்!

0

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அவ்வை நகரில் 60 ஆண்டுளாக வசித்துவரும் மக்களின் குடியிருப்புகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, மேம்பால பணிக்காக வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் இந்த நகரை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது வீடுகளை இடிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொளத்தூரையும், வில்லிவாக்கத்தையும் இணைக்கும் மேம்பால கட்டுமானப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கொளத்தூர், அவ்வை நகரில் 60 ஆண்டுகளாக வசித்து வருவோரின் வீடுகளை நீர் நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி,, இடிக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதிவாசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களின் அடிப்படை தேவையான குடியிருப்பில் கைவைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை தொடர்பாக நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:மக்களின் அடிப்படை தேவையான குடியிருப்பில் கைவைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை தொடர்பாக நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் முதல் தெருவில் சுமார் 58 குடியிருப்புக் கட்டிடங்கள் (150 குடும்பங்கள்) கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர். கடந்த 10.12.21 அன்று சென்னை மாநகராட்சி ’இவ்விடம் நீர்நிலை ஆக்கிரமிப்பு’ என்று சொல்லி வீடுகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் ஒருநாள் கழித்து, 12.12.21 அன்று காலை முதல் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளை புல்டவுசர் கொண்டு இடிக்கத் தொடங்கிவிட்டனர்.
அந்த சுற்றுவட்டாரத்தில் அவ்வை நகர் தான் முதன்முதலில் உருவான வாழ்விடப் பகுதியாகும். இதை சுற்றி கேகே நகர், குமரன் நகர் போன்ற கல்வீடுகள், மாடி வீடுகள் அடங்கிய அடர்த்தியான குடியிருப்புகள் உள்ளன. இப்போது கொளத்தூரையும், வில்லிவாக்கத்தையும் இணைக்கும் மேம்பாலம் ஒன்றின் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.கடந்த செப்டம்பர் மாத அளவில் இந்த மேம்பாலம் கட்டும் பொருட்டு அவ்வை நகரில் உள்ள வீடுகள் சில அகற்றப்பட வேண்டும் என்று சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் பாலத்தின் அகலம் சுமார் 28 அடி மற்றும் சர்வீஸ் ரோட்டுக்கான இடம் 15 இல் இருந்து 20 அடி தேவை என்ற கணக்கின்படி சாலையின் மையத்தில் இருந்து இருபுறமும் ‘அளவுக் குறியீடு ( மார்க்கிங் – marking)’ செய்துள்ளனர்.

அதன்படி சாலையோரம் உள்ள வீடுகளில் சில பகுதி மட்டுமே இடிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும், ஒரு வீடுகூட அகற்றப்படாது என்றும் சொல்லப்பட்டது (தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதியும் செய்யப்பட்டது) இந்த அடிப்படையில் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடு கட்டுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர முன்வந்தனர். ஆனால், இப்போது மேம்பாலம், சர்வீஸ் ரோடு மற்றும் பூங்கா கட்டுதல் ஆகியவற்றிற்காக அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த வீடுகளும் அகற்றப்பட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் சொல்கின்றனர். அதன்படி வரிசை வரிசையாய் உள்ள வீடுகள் அனைத்தும் இடிக்கப்படும்.

கொளத்தூர் அவ்வை நகரில் வீடுகளை இடிப்பதை உடனடியாக நிறுத்திடு!

2. பாலம் கட்டுவதற்கு தேவையான இடத்தை மக்களோடு கலந்தாலோசித்து ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ‘அளவுக் குறியீடு ( மார்க்கிங் – marking)’ அடிப்படையில் திட்டத்தை அமல்படுத்திடு!

3. பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிடு!

4. நிலத்தின் வகையை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இம்மக்களுக்கு பட்டா வழங்கிடு!

இவ்லாறு நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்