விவாகரத்து பெற்ற பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி, டிச.13-
திருச்சி எடமலைப்பட்டி புதூர் சுந்தரம் பிள்ளை தோட்டம் பாரத் மின் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகள் சண்முகவடிவு( வயது 48). திருமணமான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் தனது அக்கா அமுதா என்பவரது வீட்டில் வசித்து வந்தார் .இந்த நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்ற அவர் காலை எழவில்லை .இதனால் சந்தேகம் அடைந்த அமுதா இன்று அதிகாலை சகோதரி தூங்கிய அறைக்கதவை தட்டினார். ஆனால் எந்த சப்தமும் வரவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது சண்முகவடிவு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சி அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சண்முகவடிவு ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.