Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மணப்பாறை அருகே 4 மயில்கள் உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை.

0

மணப்பாறை டிச11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் அருகே தனியார் விளைநிலத்தில் சனிக்கிழமை இறந்து கிடந்த 4 மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணப்பாறை அடுத்த சமுத்திரம் பகுதியில் வசித்து வரும் விவசாயி செல்வம் என்பவரது விளைநிலத்தில் சனிக்கிழமை சில மயில்கள் நகர முடியாமல் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வனச்சரகர் மகேஷ்வரன் தலைமையிலான வனத்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆண் மயில், 3 பெண் மயில்கள் என 4 மயில்கள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மயில்களின் உடல்களை மீட்டு வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்டது. மரவனூர் கால்நடை மருத்துவர் பறவைகளின் உடல்களை உடற்கூராய்வு மேற்கொண்டார். 4 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்