மீண்டும் எதிரொலித்த உதயநிதி.. இதெல்லாம் பேசாதீங்க.. சபாநாயகர் ஸ்ட்ரிக்ட்! எம்.பி.யால் சலசலப்பு
ராஜேஷ்குமார் ஜி, மசோதாவைப் பற்றி மட்டும் பேசுங்க… உங்களுக்கு நேரம் அதற்கு மட்டும் இருக்கு. இதெல்லாம் பேசாதீங்க” என்று மாநிலங்களவை துணை தலைவரே டென்ஷன் ஆகி, கண்டிக்கும் அளவுக்கு, உதயநிதியை புகழ்ந்து தள்ளியுள்ளார் திமுக எம்பியான கேஆர்எம் ராஜேஷ்குமார்.
மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதையடுத்து அவர்களின் இடம் காலியானது.காலியான அந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான, வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி சோமு, கேஆர்என் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் போட்டியின்றியும் வெற்றி பெற்றனர்..
இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியபோது திமுகவை சேர்ந்த எம்எம் அப்துல்லா, கேஆர்என் ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகியோர் எம்பியாக பதவியேற்று கொண்டனர்… 3 பேருமே தமிழில்தான் பதவியேற்று கொண்டனர்.. இதில், கேஆர்என் ராஜேஷ்குமார் பதவியேற்கும்போது, ‘வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி’ என்று முழக்கமிட்டார்.இதை பார்த்த துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, ‘முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது, வெளியில் போய் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி கொள்ளலாம் (Slogans will not be part of Record.. Outside, you can say whatever) என்று கடிந்து கொண்டிருந்தார். இந்த வீடியோ ஒருபக்கம் வைரலானாலும், மற்றொரு புறம் விவாதங்களையும் எழுப்பியது.. இப்போதுதான் முதல்முறையாக தேர்தலில் போட்டியின்று எம்எல்ஏவாகி உள்ளார் உதயநிதி.. அரசியலுக்கு வந்தும் சில காலம்தான் ஆகிறது..அப்படி இருக்கும்போது எதற்காக டெல்லியில் சென்று அவர் பெயரை முழங்க வேண்டும்? முக ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த முழக்கமா இது? சபாநாயகரே கடுப்பாகிவிட்டாரே? என்றும் விமர்சிக்கப்பட்டது.. இப்போது இதே பிரச்சனை கிளம்பி உள்ளது..