நைட் நேரம்.. பஸ்ஸில் தனியாக உட்கார்ந்திருந்த இளம்பெண்.. பக்கத்தில் சென்ற கண்டக்டர்.. இப்ப ஜெயிலில்!
ஓடும் பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்டக்டரை கைது செய்துள்ளனர் போலீசார்..!நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் கண்டக்டர் மற்றும் டிரைவர்களால் சர்ச்சைகளும், பரபரப்புகளும் கூடி வருகின்றன.. குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வமேரி.. மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் குளச்சல் பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மீன் கூடைகளுடன் அரசு பஸ்சில் ஏறினார்..அப்போது பஸ்சில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பஸ் கண்டக்டர் அவரை இறக்கிவிட்டார்… இதுதொடர்பாக வீடியோ சமூக சோஷியல் மீடியாவில் பரவி, சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது… இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்..