திருச்சிக்கு கவர்னர் ரவி அவர்கள் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு பங்கேற்பதற்காக திருச்சி to புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்லும்பொழுது காவல்துறையினர் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர் இந்த நிலையில் திருச்சி சுப்ரமணியபுரம் மெயின் ரோட்டில் இருக்கும் எஸ்பி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த காவல்துறையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் சாலையை கடக்க தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் முயன்றுள்ளார் , அச்சமயம் கவர்னர் ரவி அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த கான்வாய் வாகனம் மீது சதீஷ் தன்னுடைய இருசக்கர வாகனத்தின் மூலம் எதிர்பாராமல் இடித்து உள்ளார், அதன் விளைவாக அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் முதுகு மற்றும் கைகளில் அடிபட்டுள்ளது, அவருடைய வாகனம் விபத்தில் சேதம் சேதமடைந்துள்ளது. சதீஸ் அவர்கள் காவல் துறையில் வாகன ஓட்டுநராக பணிபுரிவதாக கூடுதல் தகவல்