Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து மூன்று சிக்கல்!

0

மழை பாதிப்புகள் இன்னும் முடிவுக்கு வராததால், திட்டமிட்டபடி அடுத்தகட்ட நகர்வுகளை செயல்படுத்த முடியாத நிலை முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபரில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றியை பெற்ற திமுக, அதே சூட்டோடு டிசம்பர் – ஜனவரி மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டது. அப்படி நடத்தினால் பெரிய அளவில் வெற்றியை குவிக்க முடியும் என்று கூறப்பட்டது.இதுதொடர்பாக மாநிலம் தழுவிய அளவில் எடுக்கப்பட்ட உளவுத்துறை ரிப்போர்ட்டும் திமுக அரசுக்கு பெரிதும் சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது மழை, வெள்ள பாதிப்புகள் நிலைமையை சிக்கலுக்கு தள்ளியிருக்கிறது. ஏனெனில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தை புரட்டி போட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. இதிலிருந்து மீண்டு வர பொதுமக்களும், விவசாயிகளும் தமிழக அரசின் உதவியை நாடியிருக்கிறார்கள்.ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் பதவியேற்றுக் கொண்ட திமுக அரசு, கொரோனா சூழலை மிகவும் சிரமப்பட்டு சமாளித்தது. தற்போது மழை, வெள்ள பாதிப்புகள் மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. நிவாரண உதவியை எதிர்பார்த்து தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும், அதிகாரிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறி மீட்பு பணிகளை விரைவுபடுத்தியுள்ளனர்.இருப்பினும் மக்களின் எதிர்பார்ப்பு நிவாரண உதவியை நோக்கியே இருக்கிறது. அதிலும் அரிசி, பருப்பு, உடைமைகள் போன்றவற்றை விட நிவாரணத் தொகை எப்போது கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதற்கிடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கத் தொகை இடம்பெறாதது தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில் வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய அரசின் உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடியுள்ளார்.வழக்கம் போல் சொற்ப நிதியை மட்டும் வழங்கி மத்திய அரசு ஏமாற்றிவிடுமா என்ற கேள்வியும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனால் உடனடியாக வெள்ள நிவாரண தொகையை வழங்க முடியாமல் தமிழக அரசு உள்ளது. சிலருக்கு மட்டும் நிவாரண உதவி வழங்கினால், அது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கிவிடும். எனவே மத்திய அரசு தரும் நிதிக்காக காத்திருந்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.இதற்கிடையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உளவுத்துறை எடுத்த ரகசிய ரிப்போர்ட் கிடைத்துள்ளதாம். அதில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் 60 சதவீத வெற்றியை மட்டுமே பெற முடியுமாம். ஏனெனில் கொரோனா, மழை என அடுத்தடுத்து பேரிடர்கள் மக்களை வாட்டி எடுத்து சிறிய மனமாற்றத்திற்கு வித்திட்டுள்ளதாம்.

அவர்களின் நிலையை மீட்டெடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் தான் சாதகமான நிலையை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. எனவே அடுத்த சில மாதங்களுக்கு தேர்தலை தள்ளி வைக்க தமிழக அரசு ஆராய்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி செய்தால் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் ஆளாக நேரிடும். அதையும் சமாளித்தாக வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்