திருச்சி, செப்டம்பர் 9:
திருச்சியில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர்மீது இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த காதர்பாவா (45), திருச்சி தென்னூர் பஜாரில் பிசியோதெரபி சிகிச்சை மையம் நடத்தி வந்தார்.
நேற்று இரவு, உறையூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் சிகிச்சைக்காக அந்த மையத்துக்கு வந்திருந்தார். அப்போது சிகிச்சை அளிப்பது போல் காதர்பாவா, அந்தப் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டதால், வெளியே நின்றிருந்த அவரது உறவினர்கள் உள்ளே ஓடி வந்து அவளை மீட்டனர். உடனே சம்பவத்தை அறிந்த அவர்கள் காதர்பாவாவை பிடித்து தில்லைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில், காதர்பாவா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.