திருச்சி கே கே நகர் இரண்டாவது மெயின் ரோடு ரெங்கா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) லாரி டிரைவர் இவர் நேற்று அரசு பேருந்தில் பயணம் செய்து மன்னார்புரம் கேகே நகர் பஸ் நிறுத்தம் அருகில்
இறங்கினார். பிறகு அவர் சாலையில் சென்ற பொழுது அருகில் இருந்த இரண்டு மர்ம
ஆசாமிகள் ஆனந்த்யை தாக்கி விட்டு அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இது தொடர்பாக ஆனந்த் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில்
போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடி சென்ற இரண்டு மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஆனந்த் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.