சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைக்கலாமே என்ற யோசனையை கேட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொதித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யார் யாருடன் கூட்டணி வைப்பது என ஏகத்துக்கும் டென்ஷனான சீமான், வழக்கம் போல் தம்பிகளை தனித்து தேர்தல் களத்தில் இறக்க ஆயத்தமாகிவிட்டாராம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கால அட்டவனை தயாராக உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் அது தொடர்பான அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் வெளியிடக் கூடும். அநேகமாக மழை முழுமையாக ஓய்ந்த பின்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பது உறுதி எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கு இப்போதே வியூகங்கள் வகுத்து தயாராக உள்ளன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது. கடந்தமுறை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக திகழ்ந்தது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் எது பெரிய கட்சி என்ற போட்டியில் நாம் தமிழர் கட்சியும் இடம்பெற்றுள்ளது.