அருள்மிகு உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா 21.3.25 அன்று நடைபெறுவதை ஒட்டி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கோரிக்கை மற்றும் அறிவுரைகள்:
1) பூச்சொரிதல் விழாவிற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நாச்சியார் கோவில் சந்திப்பு-செல்லாயிமேடு- MGR சிலை வழியாக கோவிலை சென்றடைந்து மீண்டும் தேவர் சிலை- காளையன் தெரு- தம்பி காம்ப்ளக்ஸ் JN வழியாக வெளியே செல்ல வேண்டும். தம்பி காம்ப்ளக்ஸ் வழியாக உள்ளே வர அனுமதி கிடையாது.
2) ஊர்வலம் வரும் வாகனங்கள் வடிவமைக்கும் போது வழியில் உள்ள மின் கம்பிகள் அவற்றின் உயரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கட்ட வேண்டும்.
அனைத்து ஊர்வலம் வாகனங்களும் உயரம் தொடர்பாக மின்வாரியத்திடம் NOC பெற வேண்டும். இல்லாவிட்டால் ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது
3) பூ கொண்டுவரும் வழியில் எங்கும் எந்த இடத்திலும் வெடி வெடித்தல், வான வேடிக்கை செய்தல் போன்ற நிகழ்வுகள் செய்யக்கூடாது.அனுமதி கிடையாது.
4) பூ வாகனங்கள் ஊர்வலங்களில் எந்தவித சாதி அடையாளங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட வேண்டும்.
5) பூ கொண்டுவரப்படும் வாகனங்களின் முன்பு குடிபோதையில் ஆடுதல், கடைகளில் வீண் வம்புகள் செய்வோர் மீது மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
5) குறிப்பிட்ட பகுதி ஏரியாவில் இருந்து வரும் ஊர்வலங்களில் எவ்வித பிரச்சனையை ஏற்பட்டாலும் அந்தந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டுமே முழு பொறுப்பு.
6) பூ ஊர்வலங்கள் வந்து செல்லும் வழி முழுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு நீங்கள் கண்காணிப்பு செய்யப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ளவும்.
-காவல் ஆய்வாளர் உறையூர் காவல் நிலையம்.