சென்னை: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணபிக்க தவறவேண்டாம் என சிறுபான்மையின மாணவர்களுக் மத்திய அரசு அறிவுரை நல்கியுள்ளார்
டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்க்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களின் கல்வி ஒன்றிய அரசின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களும், உயர் கல்வி படிக்கும் மாணவர்களும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை,www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்ப விபரங்களை, முதற்கட்டமாக அந்தந்த பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும். ஆனால், கனமழை காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகப் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை, மாணவர்கள் வருகையும் இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.