தாயுமானவர் கோயில் நிலத்தில் முறைகேடான பட்டா வழங்கிய புகாரில் சர்வேயர் பரிமளாவிற்கு ஆதரவாக செயல்படும் அ5 இருக்கை உதவியாளர் சாந்தி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அருள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…
திருச்சி மாவட்டம் திருச்சி மேற்கு வட்டம் கோ அபிஷேகபுரம் கிராமம் ஒத்தக்கடை பகுதி நகரளவை வார்டு K(AB), பிளாக் 20 நகரளவை எண் 1 முதல் 120 வரையிலான புல எண்களில் உள்ள சொத்துக்கள் தருமபுர ஆதீன சொத்து என புகார் மனுவில் குறிப்பிடாத நிலையிலும் மற்றும் வருவாய் துறை ஆவணத்திலும் பதிவுகள் இல்லாத நிலையில் தருமபுரம் ஆதீன சொத்து என எந்த ஆவணத்தின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் அருள் அவர்கள் முடிவு செய்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருச்சி மேற்கு வட்டம், கோ.அபிஷேகபுரம் கிராமம், வார்டு: AB பிளாக். 20, நகரளவை எண்.1 முதல் 120 முடிய உள்ள எண்கள் அனைத்தும் *திருச்சி, மலைக்கோட்டை. தாயுமானவர் சுவாமிகள் தற்கால நம்பகர்கள்* என உள்ள நிலையில் மேற்படி நகரளவை எண்களில் உள்ள நிலங்கள் போலி ஆவணங்கள் அடிப்படையில் தனி நபரால் விற்பனை செய்யப்பட்டு டவுன் சர்வேயர் பரிமளா மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து பட்டா மாற்றம் செய்து வருவதாக இந்து சமய அறநிலை துறைக்கு புகார் வரப் பெற்று,
மேற்படி புகார் மனு குறித்து இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் விசாரனை மேற்கொண்ட பொழுது திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த திரு.டி.எம்.சியாம்சுந்தர் என்பவர் போலி ஆவணங்களின் அடிப்படையில் நிலங்களை விற்பனை செய்வதாக தெரிய வருகிறது.
மேற்படி நிலங்கள் அனைத்தும் வருவாய் துறை ஆவணங்களில் *திருச்சி, மலைக்கோட்டை, தாயுமானசுவாமி தற்கால நம்பகர்கள்* என இருக்கும் பட்சத்தில் மேற்படி நபரால் எந்த உத்தரவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது என பத்திரப்பதிவுத்துறைக்கு பலமுறை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விவரம் கேட்டும் இதுநாள் வரை மேற்படி விவரங்கள் வழங்ப்படவில்லை.
மேலும் மேற்படி நபரிடம் உரிய ஆவணங்கள் சமர்பிக்க கோரப்பட்டதற்கு திரு.சியாம்சுந்தர் கடிதத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கஞ்சமலை முதலியார் குடும்ப டிரஸ்டுக்கு சொந்தமான சொத்துகள் எனவும் திருச்சி அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை விற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சொத்துகள் கஞ்சமலை முதலியார் டிரஸ்டுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் ஏதும் சமர்பிக்காத நிலையில் மேற்காணும் நிலங்கள் தனிநபரால் விற்பனை செய்யப்பட்டு சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வழங்கப்பட்ட ஆட்சேபனை கடிதத்தின் அடிப்படையில் பட்டா பெயர் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில் மேற்படி கோவில் நிலங்களுக்கு பட்டா மாற்றம் எந்த ஆவணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விவரத்தினை தெரிவிக்கவும். மேலும் மேற்படி சர்வே.எண்களில் உள்ள நிலங்கள் எதன் அடிப்படையில் கஞ்சமலை டிரஸ்டுக்கு சொந்தமாக உள்ளது. தற்போது தாயுமானசுவாமி என ‘A’ பதிவேட்டில் பதிவுகள் உள்ள நிலையில் “கஞ்சமலை டிரஸ்ட்” உரிமையாளர் எவ்வாறு அதற்கு உரிமையாளர் என தெரிவிக்க இயலும் என்பது குறித்து மேற்படி இடத்தில் 1927-ம் ஆண்டுக்கான RSR நகல் வழங்குமாறு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கடந்த 19.10.2023 தேதியன்று வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருச்சி மேற்கு வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டு கடந்த ஒன்பது மாதங்களாக பதில் எதுவும் வழங்காமல் முறைகேடான வலையில் பட்டா வழங்கிய மண்டல துணை வட்டாட்சியருக்கு சாதமாக வருவாய் கோட்டாட்சியர் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது