Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

உயர்நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…!!!

0

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலமானது திருச்சி மேற்கு வட்டம், கோ-அபிஷேகபுரம் கோட்டம், நகரளவை வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண்: 8-ல் உள்ள 0.9869.4 ச.மீ. நிலத்தில் வட்டத் துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் டவுன் சர்வேயர் கார்த்திக் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து முறைகேடான வழியில் பல உட்பிரிவுகளாக பிரித்து தனி நபர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்து மீண்டும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டுமென திருச்சி வருவாய் கோட்டாட்சியருக்கும் மற்றும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கும் அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் அவர்கள் கோரிக்கை விடுத்து 15 மாதங்களாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கானது கடந்த 25-06-2024 தேதியன்று மாண்புமிகு நீதிபதி R.N.மஞ்சுளா அவர்களின் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரசு தரப்பில் வழக்கறிஞர் P. T. திரவியம் அவர்கள் ஆஜராகி “கோவில் நிலத்தில் தனி நபர்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டா திரும்பவும் இந்து சமய அறநிலைத்துறை பெயருக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக” தகவல் தெரிவித்தார்.

அதே போல் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் இத் தகவலை உறுதி செய்தார்.

அரசு தரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி, தனி நபர்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டா திரும்பவும் இந்து சமய அறநிலைதுறைக்கு மாற்றப்பட்டதை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தார்.

ஆனால் இன்று (09-07-2024) வரை மேற்படி உயர்நீதிமன்ற வழக்கில் தொடர்புடைய சர்வே எண்ணில் தனி நபர்கள் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்ட பட்டாக்கள் திரும்பவும் கோவில் பெயருக்கு மாற்றி அமைக்க திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. என்று தகவல் வெளியாகி உள்ளதாம்

தாயுமானவர் கோவில் நிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட திருச்சி மேற்கு வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் டவுன் சர்வேயர் கார்த்திக் ஆகியோரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உயர்நீதிமன்ற வழக்கில் தவறான தகவலை மாவட்ட வருவாய் அலுவலரும் மற்றும் இணை ஆணையரும் தாக்கல் செய்துள்ள விவகாரம் தற்போது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்