விசாரணை நடுக்கத்தில் மூன்று வட்டாட்சியர்கள் & சம்மன் கொடுத்தும் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுக்கும் டவுன் சர்வேயர் பரிமளா ..!!!
தமிழ்நாடு அரசு நகர்ப்புற மிகை நிலத்தில் வரன்முறைப்படுத்த அரசிடமிருந்து உரிய உத்தரவு பெறாமலே, இணைய வழி நகரளவை பதிவேட்டில் நகரளவு எண். 26 -யை 26/1, 2 என இரண்டாக உட்பிரிவு செய்யப்பட்டு நகரளவு எண்.26/2 – 0660.5 ச.மீ திரு. பன்னீர்செல்வம் என்பவர் பெயரில் முறைகேடாக பட்டா மாற்றி அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்திய வட்டாட்சியர் ராஜவேல், வட்டத் துணை ஆய்வாளர் கதிர்வேல், நகர சார் ஆய்வாளர் பரிமளா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி நில உச்சவரம்பு திட்ட சிறப்பு ஆணையர் திரு வெங்கடாசலம் ஐ.ஏ.எஸ். அவர்களிடம் கொடுக்கப்பட்ட மனு தொடர்பான நேரடி விசாரணைக்கு நகரளவைப் பதிவேடு மற்றும் அரசு ஆவணங்களுடன் திருச்சி நகர்புற நிலவரி உதவி ஆணையர் முன்பாக நேற்று (14.06.2024) காலை 11.00 மணியளவில் ஆஜராக பொன்மலை கோட்ட நகர சார் ஆய்வாளர் பரிமளாவிற்கு சம்மன் அனுப்பியும் முன்னாள் மாவட்ட பெண் அதிகாரியின் தயவில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது (சம்மன்: ந.க.எண்.அ1/277/2024).
மேலும் அரசு நிலம் தொடர்பான விசாரணைக்கு டவுன் சர்வேயர் பரிமளா ஆஜராகினால் உதவி ஆணையரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தவறு செய்தது உறுதியாகிவிடும் என்ற அச்சத்தில் தனக்கு மிகவும் வேண்டப்பட்ட முன்னாள் மாவட்டப் பெண் அதிகாரியை வைத்து உதவி ஆணையரை சரிகட்ட முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது…!!
அதேபோன்று திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் நிலத்தில் முறைகேடாக பட்டா பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக திருச்சி மேற்கு வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் வட்டாட்சியர்கள் ராஜவேல், ஷேக்முஜீப் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி திரு. மதுசூதனரெட்டி I.A.S. அவர்களிடம் நேரடியாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக தலைமைச் செயலகத்திலிருந்து திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி வாயிலாக வந்த அதிரடி உத்திரவால் கடந்த ஓராண்டுக்கு மேலாக கிடப்பில் இருந்த மனுவை தூசி தட்டி எடுத்த கோட்டாட்சியர் அருள், டவுன் சர்வேயர் பரிமளா மற்றும் வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் ஆகியோரை நேரில் அழைத்து மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை விரிவான விசாரணை செய்தும் மற்றும் முறைகேடு தொடர்பான ஆதார ஆவணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் ஒப்புதலோடு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்ட வருவாய்த்துறைக்கு தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தும் டவுன் சர்வேயர் பரிமளாவுக்கு ஆதரவாக மாவட்ட முன்னாள் பெண் அதிகாரி சிபாரிசு செய்து வருவதால் தான் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..