கோவில் விழாவில் தகராறு
பாலக்கரையில் மருளாளி மகன் மீது தாக்குதல்,இரண்டு பேருக்கு வலைவீச்சு
திருச்சி,மே.31:
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை மதுரை வீரன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரதன் (வயது 23). இவரது தந்தை அந்த பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலில் மருளாளியாக இருந்து வருகிறார். சம்பதவன்று அந்த கோவிலின் திருவிழா நடந்து வருகிறது.
இதில் காவிரியில் புனித தீர்த்தம் எடுத்து வரும் ஊர்வல நிகழ்ச்சியில் பரதன் கலந்து கொண்டார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவனை கேலி கிண்டல் செய்தனர்.மேலும் கோவில் அருகே வைத்து அவரை மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பரதனின் கமுத்து மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. பிறகு அவர் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரதன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இரண்டு அடையாளம் தெரியாத வாலிபர்களை பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு அடையாளம் தெரியாத வாலிபர்களை தேடி வருகின்றனர்.