Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

எஸ்டிபிஐ கட்சியின் முப்பெரும் நிகழ்ச்சி

0

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம்,
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரம் சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி, ஃப்ரீசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு, பொது மருத்துவ முகாம் என்கின்ற முப்பெரும் நிகழ்ச்சி துவாக்குடி நகர தலைவர் முஹம்மது யாசீன் தலைமையில், திருவெறும்பூர் தொகுதி செயலாளர் S.ஹக்கீம் முகமது முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக இமாம் R.ஹஸ்ஸான் பைஜி, MBA திருச்சி மண்டல தலைவர் அவர்கள் கலந்துகொண்டு SDPI கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பின்னர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும் துவாக்குடி நகர மக்களுக்காக
ஃப்ரீசர் பாக்ஸை அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி முன்னிலை வகித்தார் மேலும், மாவட்ட செயலாளர் மதர் ஜமால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது சித்திக்,SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் S.M.மீரான் மைதீன்,
சுற்று சூழல் அணி மாவட்ட தலைவர் SS.ரஹ்மதுல்லாஹ்,
திருவெறும்பூர் தொகுதி தலைவர் இஸ்மாயில் ராஜா மற்றும் நிர்வாகிகள், கிழக்குத் தொகுதி தலைவர் முஸ்தபா மற்றும் நிர்வாகிகள்,மேற்குதொகுதி துணை தலைவர் KSA. ரியாஸ் மற்றும் நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள் ,கிளை நிர்வாகிகள்,கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் துவாக்குடி நிர்வாகிகள் முன்னிலையில் ஏராளமான பொது மக்கள் திரளாக கொண்டு மருத்துவ முகாமில் பயன் அடைந்தனர்.

இறுதியாக துவாக்குடி நகர துணை தலைவர் முகமது மைதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்