நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் பட்டா வழங்கி கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்திய டவுன் சர்வேயர் பரிமளா & ஹெட் சர்வேயர் கதிர்வேல்…
தமிழ்நாடு நகர்ப்புற (நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1978-ன் கீழ் உச்ச வரம்பிற்கு மேல் மிகை வெற்று நிலம் வைத்திருந்த சில நில உரிமையாளர்களிடமிருந்து அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
மேற்படி சட்டம் செயலுக்கு வந்த நாள் 03.08.1976 முதல் 31.12.1994 வரையில் 1 1/2 (ஒன்றரை) கிரவுண்டு நிலம் வரை, குடியிருப்பு நோக்கத்திற்காக அறியாமல் கிரையம் பெற்ற நிலங்களை பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட மண்டல மதிப்பின் அடிப்படையில், அவர்கள் வாங்கியுள்ள நிலங்களுக்கு ஏற்ப நில மதிப்புத் தொகையினை செலுத்துவதன் மூலம் வரன்முறைப்படுத்தலாம் என அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வரன்முறை செய்ய தனி நபரைப் பொறுத்த வரையில் 1 1/2 கிரவுண்டு வரை சிறப்பு ஆணையர் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி ஆணையராலும் மற்றும் 1 1/2 கிரவுண்டுக்கு மேல் அரசளவிலும் ஆணை வெளியிடப்படும்.
மேற்படி மிகை வெற்று நிலத்தை வரன்முறைப்படுத்தி மற்றும் பட்டா பெயர் மாற்றம் உரிய உத்தரவு பெற்றிருந்தால் மட்டுமே தான் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அரசாணை உள்ள நிலையில் திருச்சி மேற்கு வட்டம், பிராட்டியூர் கிழக்கு கிராமம், பழைய புல எண் 158/21I க்கு, வார்டு: AL பிளாக்:36 நகர புல எண்: 26-ல் உள்ள 0.7757.0 சதுர மீட்டர் தமிழ்நாடு அரசு நகர்புற மிகை வெற்று நிலம் என பதிவாகியுள்ள நிலத்தின் ஒரு பகுதியை திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் உள்ள கோரையாற்றின் குறுக்கே உயர் மட்டப் பாலம் அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறைக்கு கையகப்படுத்த நகர புல எண்: 26 ஐ 26/1 மற்றும் 26/2 என இரண்டாக உட்பிரிவு செய்யப்பட்டு 26/1-க்கு 0.7158.9 சதுர மீட்டர் நிலம் தமிழ்நாடு அரசு நகர்புற மிகை வெற்று நிலம் பெயரிலும் மற்றும் 26/2-க்கு 0.0598.1 சதுர மீட்டர் நிலம் நெடுஞ்சாலைத்துறைக்கு
திருச்சி மேற்கு வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் வட்டாட்சியர் ராஜவேல் ஆகியோரால் கூராய்வு மற்றும் உட்பிரிவு கோப்பில் கையொப்பம் செய்துள்ளனர்.
மேற்படி வார்டு: AL, பிளாக்:36, நகர புல எண்: 26 ஐ 26/1 மற்றும் 26/2 என இரண்டாக உட்பிரிவு செய்யப்பட்டு 26/2 – ல் 0.0598.1 சதுர மீட்டர் நிலம் நெடுஞ்சாலைத்துறை என பதிவாகி இருந்தும் ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கப்பட்ட உட்பிரிவு எண் மற்றும் நிலம் கையகம் செய்யப்பட்ட புலத்தில் உட்பிரிவு செய்யப்பட்டுள்ளதனை மறைத்து டவுன் சர்வேயர் பரிமளா மற்றும் ஹெட் சர்வேயர் கதிர்வேல் கூட்டாக சேர்ந்து
நகரளவை எண்: 26 ஐ மீண்டும் இரண்டாக உட்பிரிவு செய்து 26/1-க்கு
0.7696.5 சதுர மீட்டர் நிலம் தமிழ்நாடு அரசு நகர்புற மிகை வெற்று நிலம் எனவும் மற்றும் 26/2-க்கு 0.0660.5 சதுர மீட்டர் நிலம் அய்யாதுரை மகள் பன்னீர்செல்வம் என்பவரின் பெயரில் பட்டா பெயர் மாற்ற விண்ணப்ப எண்: 2023/15/01/ 002923SD நாள் 16.09.2023 படி பட்டா வழங்கி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் நில அளவைத்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வண்ணம்
மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் நிலம், தருமபுரம் ஆதீன நிலம், கிறிஸ்தவ சபை நிலம், அரசுக்கு சொந்தமான நிலம் என அனைத்து நிலங்களிலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பட்டா வழங்கிய புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினராலும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விசாரணை செய்து வருகின்ற நிலையில் திருச்சி மாவட்ட அமைச்சரின் பி. ஏ. மற்றும் மாவட்ட முன்னாள் பெண் அதிகாரியின் பெயரை சொல்லி தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது