முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தவறான தகவலினை வழங்கி உள்ளாரா? திருச்சி மாநகராட்சி சர்வேயர் பரிமளா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை….
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/1- ல் 0.2629.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/3- ல் 0.1833.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 1, நகரளவை எண்: 1- ல் 2.5155.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 8, நகரளவை எண்: 1- ல் 0.400.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 8, நகரளவை எண்: 2- ல் 0.685.0 சதுர மீட்டரும் மற்றும் வார்டு: AB, பிளாக்: 8, நகரளவை எண்: 14- ல் 0.132.0 சதுர மீட்டரும் ஆகிய ஆறு சர்வே எண்ணில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த முழு விவரம் அறிய பொன்மலை கோட்ட, நில அளவை நகர சார் ஆய்வாளர் கொண்டு அளவீடு செய்ய திருச்சி மேற்கு வட்டாட்சியர் மற்றும் பொன்மாலை கோட்ட உதவி ஆணையர் ஆகியோர் குறிப்பானை வழங்கி இருந்தும் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக சம்பந்தப்பட்ட வாய்க்காலினை அளவீடு செய்யாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 14-05-2024 தேதியன்று புகாரில் கொடுக்கப்பட்டுள்ள ஆறு புல எண்களை அளவிடு செய்யாமல் மூன்று புல எண்களை மட்டும் அளவீடு செய்தது போன்ற பொய்யான தகவலை மேலதிகாரிகளுக்கு வழங்கியும் மற்றும் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு ஏதுமில்லை எனவும் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு அறிக்கை வழங்கி உள்ளார் கூறப்படுகிறது
ஆனால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து புகைப்படம் ஆதாரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குறித்த நில அளவை வரைபடத்துடன் கூடிய தகவல்களுடன் டவுன் சர்வேயர் பரிமளா குறித்து நில அளவை இயக்குனர் மதுசூதன ரெட்டி அவர்களுக்கு விரிவான புகார் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
அது மட்டுமல்லாது *UDR* பட்டா பெயரில் உள்ள தவறை திருத்தம் செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ சபைக்கு பாத்தியப்பட்ட 14 ஏக்கர் 11 சென்ட் நிலத்தில் முறைகேடாக பட்டா பெயர் மாற்றம் செய்த மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் மற்றும் டவுன் சர்வேயர் பரிமளா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுக்கப்பட்ட புகார் மீது இன்று காலை 11 மணியளவில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் திரு அருள் அவர்களால் விசாரணை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.